பெருவில் 8 ஊசிகளை விழுங்கிய 2 வயதுச் சிறுவன் – மருத்துவர்களின் அபூர்வ செயல்
பெருவில் 8 ஊசிகளை விழுங்கிய 2 வயதுச் சிறுவன் தப்பிப் பிழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தாயார் வேலைசெய்யும் பண்ணையில் விளையாடியபோது அவன் Hypodermic ஊசி எனும் தோலுக்கு அடியில் மருந்தேற்றும் சிறு ஊசிகளை சிறுவன் விழுங்கியுள்ளார.
பண்ணையில் மாடுகளுக்குத் தடுப்பூசி போட அந்த ஊசிகள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
சிறுவனுக்கு உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறுவனின் வயிற்றிலும் குடலிலும் இருந்து ஊசிகள் மீட்கப்பட்டன.
சிறுவன் உடல்நலம் தேறிவருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.





