பொழுதுபோக்கு

‘புஷ்பா- 2’ படத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட 19 நிமிட காட்சிகள் – காரணம் என்ன?

கடந்த 2021 ஆம் ஆண்டு ‘புஷ்பா- 1’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா-2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் திரையிடப்பட்ட ‘புஷ்பா-2’ படத்தில் 19 நிமிடங்கள் நீக்கப்பட்டிருக்கிறது. புஷ்பா – 2 படத்தின் நீளம் மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஆகும்.

ஆனால், சவுதி அரேபியாவில் 3 மணி நேரம் 1 நிமிடம் மட்டுமே திரையிடப்படுகின்றது. இந்தத் தகவல், சவுதி அரேபியாவில் இருக்கும் அல்லு அர்ஜுன் ரசிகர்களை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சவுதி அரேபியாவில் திரையிடப்படும் புஷ்பா-2 வில் ‘கங்கம்மா ஜத்தாரா’ (குலதெய்வ வழிப்பாட்டுக்கான காட்சிகள்) என்ற காட்சிகள் நீக்கியதே இந்தக் குறைந்த மணிநேரத்திற்கு காரணம். சவுதி அரேபியாவின் மதம் மற்றும் கலாச்சார அடிப்படையில் இந்தக் கட்சிகளை சவுதி அரேபியா சென்சார் அமைப்பு நீக்கியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்