இந்தியா

இந்தியாவில் சிகிச்சைக்காக வந்த 18 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், கல்வா பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 18 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

சத்ரபதி சிவாஜி மகராஜ் மருத்துவமனை அதிகாரிகள் நேற்று (13.08) இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 10 பெண்களும் அடங்குவர். மேலும், உயிரிழந்த 18 பேரில் 12 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இறப்புகள் குறித்து விசாரிக்க ஒரு சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது, அவர்கள் முதலில் மரணத்திற்கு வழிவகுத்த மருத்துவ உண்மைகளை ஆராய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ள நிலையில், இந்த மரணத்தால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே