உளவு குற்றச்சாட்டில் ஜம்மு காஷ்மீரில் 15 வயது சிறுவன் கைது
ஜம்மு-காஷ்மீரின்(Jammu and Kashmir) சம்பா(Samba) மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், இந்திய ராணுவ இருப்பிடங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் உளவு நிறுவனம், இன்டர்-சர்வீஸ் இன்டலிஜென்ஸ்(ISI) மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் கையாள்பவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் பஞ்சாப்(Punjab) காவல்துறையினர் மதோபூர்(Madhopur) பகுதியில் அந்த சிறுவனை கைது செய்தனர்.
இந்நிலையில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளை அவர் பயங்கரவாத குழு மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சிறுவன் ஒரு வருடத்திற்கும் மேலாக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக அறியப்படுகிறது.
1923ம் ஆண்டு அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ், சிறுவன் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.





