ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவால் 04 பேர் உயிரிழப்பு!
பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் நேற்று தனித் தனியே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 04 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
கிரெனோபிள் அருகே பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல் 30 வயதுடைய மற்றொருவர் மோன்ட்ஜெனெவ்ரே (Montgenevre) அருகே ‘மிகப் பெரிய பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
தென்கிழக்கு பிரான்சின் செயிண்ட்-வேரான் (Saint-Veran) அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 30 வயதுடைய இரண்டு ஸ்கை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குளிர் காலத்தில் ஐரோப்பா முழுவதும் பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய பனிச்சரிவு எச்சரிக்கை சேவைகள் ஆண்டுதோறும் சராசரியாக 100 இறப்புகளைப் பதிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.





