மியன்மாரில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!
மியான்மரில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக GFZ தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, இந்த நிலநடுக்கம் கொல்கத்தா உட்பட கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் உணரப்பட்ட வலுவான நிலநடுக்கங்களைத் தூண்டியதாக கூறப்படுகிறது.





