அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன்படி புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், யுரேனஸ் ஆகிய ஐந்து கிரகங்களும் பூமிக்கு அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வு, வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஐந்து கிரகங்களும் வில் வடிவத்தில் நமது கண்களுக்கு தெரியும் என்றும், புதன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை மட்டும் தொலைநோக்கி கொண்டு பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானத்தில்

இந்த நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28) நடந்தாலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, அந்த நிகழ்வானது அதற்கு முன் தினம் மற்றும் அடுத்த நாளும் வானத்தில் தெரியக்கூடும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னர், 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக அந்த அரிய நிகழ்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தெரிந்தது.அப்போது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவை தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 11 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

Whatsapp பயனர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • April 26, 2023
Whatsapp பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைத்தொலைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இனி தங்கள் கைத்தொலைபேசியில் உள்ள Whatsapp கணக்கினை நான்கு