இலங்கை செய்தி

புதிய ஒம்புட்ஸ்மனாக கே.பி.கே.ஹிரிம்புரேகம ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்

நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளராக (ஒம்புட்ஸ்மன்) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிம்புரேகம இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 156(2) மற்றும் 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிர்வாக விவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் பிரிவு 3(1) ஆகியவற்றின் படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை