பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு வலியுறுத்தும் சிவில் சமூக பிரதிநிதிகள்!
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு சிவில் சமூக பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பயங்கரவாதத்தடைச் சட்டத்தைவிட மிகமோசமான இச்சட்டமூலத்தை அரசாங்கம் முழுமையாக வாபஸ் பெறவேண்டுமென மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.
அதன் ஓரங்கமாக சிவில் சமூக உறுப்பினர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக சந்திப்புக்களை நடாத்திவருவதாகவும்இ அவர்களிடம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் மிகமோசமான தன்மை குறித்து விளக்கமளித்துவருவதாகவும் அறியமுடிகின்றது.
அதுமாத்திரமன்றி உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்துக்கு எதிராக நிலைப்பாட்டை எடுக்குமாறு தாம் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் பிரயோகித்துவருவதாகவும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.