செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பாக ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்றது

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வருகை தரும் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பன குறித்து இந்த ஒத்திகையில் நிகழ்ச்சி வாயிலாக காண்பிக்கப்பட்டது

இந்நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்வினை ஆய்வு செய்தார் அதைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் சிகிச்சை அளிக்கும்  அறைகளை ஆய்வு மேற்கொண்டார்

மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் முறையாக பராமரிக்கப்படுகிறதா தடையில்லா ஆக்சிஜன் கிடைக்க மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டு அறிந்தார்

இந்த நிகழ்வில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!