ஜெர்மனியில் அமுலாகும் புதிய நடைமுறை?
ஜெர்மனி நாட்டில் சமூக வலைதளங்கள் தொடர்பான ஒரு நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் தற்போது முன்வைக்கப்படுகின்றன.
ஒருவர் பற்றிய தவறான தகவல்களை அல்லது அவதூறுகளை சமூக வலைதளங்களில் பதிந்தால் அவர்கள் தண்டிக்கப்பட கூடிய சட்டமாக இந்த சட்டம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் சமூக வலைதளங்களில் ஒருவர் இன்னொருவர் பற்றி அவதூறான பிரச்சாரங்களை மேற்கொள்வதை தடை செய்வதற்காக புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜெர்மனியினுடைய ஆளும் கூட்டு கட்சிகள் இப்பொழுது திட்டமிட்டுள்ளது.
இதுவரை காலங்களிலும் சமூக வலைதளங்களில் உள்ள ஒருவர் தனது கணக்கின் மூலமாக மற்றவரை பற்றி அவதூறான பிரச்சாரங்களை மேற்கொண்டால் அல்லது அவர் பற்றி பிழையான கருத்துக்களை வழங்கினால் அந்த சமூக வலைத்தளங்களை நடாத்துகின்ற நிறுவனங்கள் இவர்களுடைய இந்த கணக்கை இடை நிறுத்தலாம்.
ஜெர்மனியில் பாராளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி நீதிமன்றங்களின் ஊடாக இவ்வாறான நடவடிக்கையை கடுமையான முறையில் மேற்கொள்வதற்காக புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதேவேளையில் இந்த சமூக வலைதளங்கள் கணக்குகளை முடக்குவதற்காக ஜெர்மன் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதற்காக தெரியவந்திருக்கின்றது.