ஜெர்மனியில் அகதி முகாமில் பாரிய வன்முறை – அடிதடியில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கானோர்
ஜெர்மனி நாட்டில் அகதிகளை தங்க வைக்கும் முகாமில் பாரிய வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜெர்மனியின் ஊனாந் பிரதேசத்தில் அகதிகள் நாட்டுக்குள் முதல் தடவை வந்தால் குறிப்பிட்ட காலம் தங்க வைக்கின்ற அகதி முகாம் உள்ளது.
இந்த அகதி முகாமில் 17.08.2023 இல் பாரிய வன்முறை சம்பவம் ஒன்று நடைபெற்றதாக தெரியவந்து இருக்கின்றது.
அதாவது இந்த அகதி முகாமில் உள்ள அகதிகள் தங்களிடையே சண்டையிட்டுக்கொண்டதாகவும் இந்த சண்டையில் 100க் கணக்கானவர்கள் பங்கேற்றதாகவும் தெரியவந்திருக்கின்றது.
இந்த அகதி முகாமில் மொத்தமாக 800 அகதிகள் வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கிடையே இவ்வாறான மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரியவந்து இருக்கின்றது.
இவ்வாறான சம்பவங்கள் ஏற்கனவே நடைபெற்றதாகவும் தெரியவந்திருக்கின்றது.
இந்நிலையில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் சுவல் என்ற பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்கள் உள்ள இடத்தில் குறிப்பாக அகதிகள் உள்ள இடத்தில் அகதி முகாம் ஒன்று அமைக்கப்பட்டதாகவும்,
இந்த அகதி முகாம் அமைக்கப்பட்டதுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.