ஜி20 மாநாட்டில் போர் குறித்து விவாதிக்கப்படும் : வினய் குவாத்ரா!
ஜி20 மாநாட்டில் போர் குறித்த விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப்படும் என இந்தியாவின் வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார்.
ஜி20 கூட்டம் நாளை இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், உணவு, ஆற்றல், மற்றும் உர பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களில் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை போர் குறித்த விவகாரத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்திருந்தது. அத்துடன், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலைமையுடன் செயல்பட்டு வருகிறது.
(Visited 1 times, 1 visits today)