ஆசியா செய்தி

சீனாவில் அதிகாலையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலநடுக்கம்

சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங்கில் உள்ள ஹோட்டானில் இன்றுஅதிகாலை 2.32 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது ஹோட்டனில் இருந்து 263 கிலோமீட்டர் தென்-தெற்கு-கிழக்கே தாக்கியுள்ளது. மேலும் பூமிக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள தஜிகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜின்ஜியாங் பிராந்தியத்தின் மேற்கு பகுதியில் உள்ள கஷ்கர் மற்றும் ஆர்டக்ஸ் ஆகிய பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 8 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி