ஆசியா செய்தி

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் பலரை ஏமாற்றும் போலி முகவர்கள் தொடர்பில் எச்சரிக்கை

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் பலரை ஏமாற்றும் போலி முகவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாடகை மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் சுமார் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சுமார் 1.3 மில்லியன் சிங்கப்பூர் டொலர் மோசடி நடந்துள்ளதாகவும், அவர்களில் 9 ஆண்கள், 3 பெண்கள் அடங்குவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வயது 18 முதல் 56 க்கு உட்பட்டு இருக்கும் என்றும் பொலிஸார் நேற்றைய அறிவிப்பில் கூறினர்.

வாடகைக்கு வீடு அல்லது இடம் தேடுவோரிடம் முகவர்கள் போல பேசி அவர்களிடம் வாடகையை முன்பணமாக பெற்று ஏமாற்றுவதே இவர்களின் வேலையாகும்.

அவர்கள் வாடகை இடத்தை காட்டாமலேயே பணத்தை கேட்டு ஏமாற்றுவர் என்றும் கூறப்படுகின்றது.

மொத்தம் 480 மோசடி சம்பவங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!