இந்தியா செய்தி

ஊடகவியலாளர்களிடம் கோபத்தை வெளிப்படுத்திய சைஃப், கரீனா கபூர்

பொலிவூட்டின் சூப்பர்ஸ்டார் ஜோடிகளான சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களிடம் தமது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியொன்று பரபப்பாகியுள்ளது.

பொலிவூட் நட்சத்திரமான மலாய்கா-அம்ரிதா அரோராவின் தாய் ஜாய்ஸின் 70வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட தம்பதியரை தொல்லை செய்ய பின்தொடர்ந்த ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சயீப் அலி கான் அதிரடியாக பதிலளித்துள்ளார்.

சைஃப் மற்றும் கரீனா, கருப்பு உடையில், கைகளைப் பிடித்துக் கொண்டு, கட்டிடத்திற்குள் விரைந்து செல்ல முயன்றுள்ளனர். இருப்பினும், புகைப்படக் கலைஞர்கள் அவர்களை தொடர்ந்து கிளிக் செய்து அவர்களின் கட்டிடத்திற்கு பின்தொடர்ந்தனர்.

இதனை விரும்பாத சைஃப் மற்றும் கரீனா ஒரு சில வார்த்தைகளில் கடுமையாக விமர்சித்துள்ளனர்,

அப்போது புகைப்படக்காரர் ஒருவர், “சைஃப், நாங்கள் உங்களை விரும்புகிறோம்” என கூறியுள்ளார்.

அதற்கு சைஃப், நாங்களும் உன்னை நேசிக்கிறோம் என்று பதிலளித்து செல்வது வீடியோ காணொளிகளில் பதிவாகியுள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!