இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
சுமார் ஒரு வாரகாலம் இலங்கையில் தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு கலந்துரையாட உள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட உள்ள திருத்தங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழுவுக்கு அரசாங்கம் வழங்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டது.
இலங்கையால் அங்கீகரிக்கப்பட்ட மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மற்றும் நல்லாட்சி கொள்கைகளை உள்ளடக்கிய விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு கொழும்பு சந்திப்புகளில் அவதானம் செலுத்தியுள்ளது.