இலங்கை செய்தி

இனப்பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டும் என்ற நிபந்தனையையும் ஐ.எம்.எஃப் விதிக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்!

இனப்பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டும் என்ற நிபந்தனையையும் ஐ.எம்.எஃப் விதிக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்!

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று(22) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் வகையில் அமைய வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது தொடர்ந்து ஏமாற்றத்திற்கு உட்படுத்தப்படும் ஒரு செயற்பாடாக காணப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம்  பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை நாணய சபையிடம் முன்வைக்கிறேன். அப்போது தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் சூழல் தோற்றம் பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை