அளவிற்கு அதிகமான முட்டை சாப்பிடுவதால் ஆபத்து
முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. புரத சத்து மிக்க முட்டையை காலை உணவாக சாப்பிடுபவர்கள் ஏராளம். தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது. ஆனால், முட்டைகளை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
காலை உணவிற்கு முட்டை மிகச் சிறந்த தேர்வு. ஏனெனில் இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது. முட்டையை பல வகைகளில் சாப்பிடலாம். காலை உணவாக இதை சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். மேலும், இதில் உள்ள்ச் சிறந்த விஷயம் என்னவென்றால், இதனை நொடியில் தயாரித்து விடலாம். தினமும் முட்டை சாப்பிடும் போது, கட்டுப்பாட்டுடன் சாப்பிடுவது மிகவும் அவசியம் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் 1-2 முட்டைகள் சாப்பிடுவது நல்லது. முட்டையை கட்டுப்படுகளுடன் மிதமாக உட்கொள்வது கொலஸ்ட்ரால் உட்ப பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம்
முட்டைகளை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தை பாதிக்கலாம், முட்டையில் புரதச்சத்து நிறைந்திருப்பதே இதற்குக் காரணம். அளவுக்கு அதிகமான புரதம், சிறுநீரகத்தை பாதிக்கும் (Kidney Health). எனவே உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், நீங்கள் முட்டைகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம்
புரதச்சத்து காரணமாக அதிகம் இருப்பதன் முட்டையை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்று பலர் நம்புகிறார்கள். முட்டைகள் கொழுப்பை குறைக்க உதவுகின்றன என்றாலும், அவற்றை அதிகமாக உட்கொள்வது கொழுப்பை சேர்த்து உடல் பருமன் ஏற்பட காரணமாகலாம். அதிக அளவிலான முட்டை உட்கொள்வதினால், நீங்கள் உட்கொள்ளும் கலோரி அதிகரிப்பதும் இதற்கு காரணம்.
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயம்
ஒரு முட்டையில் சுமார் 180 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஒரு நாளைக்கு ஒரு முட்டை அல்லது இரண்டு முட்டை சாப்பிடுவதால் பாதிப்பு ஏதும் இருக்காது. ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளுக்கு மேல் உட்கொள்வதால், உடலில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கலாம். உங்கள் இதய ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே, முட்டையை அளவாக மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம்
முட்டைகளை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதினால் செரிமான ஆரோக்கியம் சீர்குலையும். அதிக முட்டைகளை சாப்பிடுவது வயிற்றுப்போக்கு அபாயத்தை அதிகரிக்கிறது. இதற்கு நேர்மாறாக சில சமயங்களில் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், வயிற்றில் எரிச்சல் மற்றும் வாயு பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் இருக்கலாம்.