செய்தி தமிழ்நாடு

ஒரே நாளில் 19 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 19 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் குற்ற வழக்கு சம்பந்தப்பட்ட ரவுடிகள் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்த நிலையில் 19 ரவுடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்து 10 ரவுடிகளை காஞ்சிபுரம் கிளை சிறையிலும், 9 பேர் புழல் சிறையிலும் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(20), விக்னேஷ்(23), வல்லரசு(23), பிரித்திக்குமார்(22), அலெக்ஸ்(23), தினேஷ்(23), வெங்கடேஷ்(26), சச்சின்(25), செல்வம் (20), நரேஷ் (18), சரவணன் (18), சபரி (21), சந்தோஷ் (17), கௌதம் (20), கமல்ராஜ்(27), விஜயராகவன்(34), தினேஷ்(24), ராஜேஷ்(23),  ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த முருகன் (25) ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்படி வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளை துரிதமாக விரைந்து கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்ட சம்மந்தப்பட்ட காவல்துறையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் வெகுவாக பாராட்டினார்.

(Visited 9 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி