இலங்கை செய்தி

வடக்கின் பல மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்பட்ட T20 உலகக்கிண்ணம்

இம்முறை இடம்பெறும் T20 உலகக்கிண்ணத்திற்கான வெற்றி கிண்ணம் இன்று வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டது.

இன்று காலை 10.30 அளவில் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக்கிண்ணமானது பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

இதன்போது வடமாகாண துடுப்பாட்ட சங்கத் தலைவர் உட்பட வவுனியா மாவட்ட துடுப்பாட்ட அணிகள் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வரவேற்றனர்.

தம்புள்ளையில் இருந்து 7.30 க்கு எடுத்து வரப்பட்ட உலகக் கிண்ணமானது 8.30 க்கு மிஹிந்தலை நகரத்தில் வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு வவுனியாவில் வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 12.00 மணிக்கு கிளிநொச்சியில் வைக்கப்பட்டது.

அதன்பின்னர் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 3.30க்கு யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையிலும், 4.25க்கு நல்லூர் கந்தன் ஆலயத்திலும், 6.20க்கு துரையப்பா விளையாட்டு அரங்கிலும், 6.40க்கு யாழ்ப்பாணம் கோட்டையிலும், 7.10க்கு யாழ்ப்பாணம் நூலகத்திலும் வைக்கப்படுகிறது.

T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் கடந்த 21.01.2026 அன்று உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் உலகக் கிண்ணமானது இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!