ராகுல் காந்திக்கு ஜாமீன்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
அதன்படி, அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவையடுத்து, குறித்த மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் தண்டனையை ரத்து செய்யாவிட்டால், அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார், மேலும் எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
(Visited 1 times, 1 visits today)