இலங்கை

மட்டக்களப்பு கொலை வழக்கு: சிக்கிய சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை!

batticaloa-police-station-investigation-murder-case-suspects-arrested

மட்டக்களப்பை அதிரவைத்த கொலை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் நேற்றைய தினம் நீதிபதியின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நான்கு தினங்களுக்கு தடுத்துவைத்து விசாரணைசெய்வதற்கான அனுமதியை வழங்கியதுடன் அவர்களிடம் நகைகளை கொள்வனவுசெய்த நகைக்கடை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி வெள்ளிக்கிழமை வவுணதீவு பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டு அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட நெல்லியடி வயல் பிரதேச கிணற்றினுள் வீசப்பட்டதும், ஏற்கனவே இவ்வாறாக இடம்பெற்ற சம்பவமொன்றில் கொல்லப்பட்ட பெண்ணின் சடலமொன்றும் குறித்த கிணற்றினுள் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரினால் முன்னெடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் மூலம் பிரதான சந்தேகநபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பொலிசாரினால் முன்நிலைப்படுத்தப்பட அழைத்து வரப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்த முடியாமையினால் நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீதவான் அண்ணாத்துறை தர்சினி முன்நிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது பொலிசாரினால் சந்தேகநபர்களை 04 நாட்களுக்கு மேலும் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான மனு நீதிபதியிடம் சமர்ப்பித்ததையடுத்து பிரதான சந்தேகநபர்கள் மூவரையும் 04 நாட்களுக்கு பொலிசார் தடுத்து வைத்து விசாரிப்பதற்கும், ஏனைய இருவரையும் எதிர்வரும் 2026.03.27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதியினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 2026.03.27ம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!