போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது – விமல்
அரசாங்கத்துக்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நுகேகொடை பகுதியில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டங்கள் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது.
தேசிய தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களும் செயற்படுத்தப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய தேசிய வளங்களையும்இஅரச நிறுவனங்களையும் விற்று பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது.