பிரான்ஸில் காதலுக்கு வயதில்லை என்பதை நிரூபித்த திருமணம் – 100 வயது மணமகன்
பிரான்ஸில் காதலுக்கு வயதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருமணம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய, 100 வயது நபர் தம்முடைய 96 வயதுக் காதலியைக் கரம் பிடித்துள்ளார்.
ஹரலட் டெரென்ஸும் ஜீன் ஸ்வெர்லினும் நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டனர்.
இளைஞர்களுக்கு மட்டும்தான் காதலிக்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்குமா? எங்களுக்கும்தான்” என்று டெரென்ஸ் கூறியதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
திருமணத்திற்கு வந்திருந்தோரும் ஆரவாரத்துடன் திருமணத்தில் கலந்துகொண்டனர். புதுமணத் தம்பதியை பலரும் வாழ்த்தியுள்ளனர்!
(Visited 13 times, 1 visits today)