பிரான்ஸின் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
பிரான்ஸின் காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஐந்து மாவட்டங்களுக்கு காட்டுத் தீ பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் காட்டுத் தீயினை கணிக்கும் கருவி அமைக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Meuse, Moselle, Meurthe-et-Moselle ஆகிய மூன்று கிழக்கு மாவட்டங்களிலும், பரிஸ் மற்றும் Hauts-de-Seine ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த ஐந்து மாவட்டங்களுக்கும் ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக Météo France அறிவித்துள்ளது.
ஜூன் மாத ஆரம்பத்தில் இந்த காட்டுத் தீயினை கணிக்கும் கருவி அமைக்கப்பட்டதன் பின்னர், முதன்முறையாக தற்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கருவி வரும் செப்டம்பர் மாதம் வரை செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.