ஐரோப்பா செய்தி

பிரான்சில் பொலிஸாருக்கு கொலைமிரட்டல் விடுத்து வந்த நபர்: கைது செய்யச் சென்றபோது நிகழ்ந்த பயங்கரம்..!

பிரான்ஸ் நாட்டில் ஒருவர் தொடர்ந்து பல நாட்களாக பொலிஸாருக்கு கொலைமிரட்டல் விடுத்துக்கொண்டே இருந்துள்ளார். அவரைக் கைது செய்ய பொலிஸார் சென்றபோதுதான் எதிர்பாராத அந்த சம்பவம் நிகழ்ந்தது.

பிரான்சிலுள்ள Allier என்ற இடத்தில், Christophe B, (38) என்னும் ஒருவர் தொடர்ந்து பொலிஸாருக்குக் கொலைமிரட்டல் விடுக்கவே, அவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் சென்றுள்ளார்கள்.

மூன்று பொலிஸார் அவர் இருந்த வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கைது செய்யும்போதுதான் பயங்கரமான பெட்ரோல் வாசனை வீசுவதை உணர்ந்துள்ளார்கள்.அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற முயல்வதற்குள் அந்த வீடு வெடித்துச் சிதறியுள்ளது. அதில் அந்த மூன்று பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளார்கள். அவர்கள் கைது செய்யச் சென்ற நபர் தீயில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.

அந்த மூன்று பொலிஸாரையும் காப்பாற்ற மேலும் மூன்று பொலிஸார் வீட்டுக்குள் செல்ல அவர்களுக்கும் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.அந்த வீடு தீயில் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்ட நிலையில், தீயணைக்கப்பட்ட பிறகே அந்த கொலைமிரட்டல் விடுத்த நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

 

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!