செய்தி

நர்சரியில் 26 குழந்தைகள் மீதுபாலியல் துஷ்பிரயோகம்: வடக்கு லண்டனில்0

வடக்கு லண்டனில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் (Nursery) குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வின்சென்ட் சான் (Vincent Chan – 45) என்ற ஊழியர், அங்குள்ள சிறு குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த பள்ளியில் விசில் ஊதுபவரின் (whistleblower) தகவலைத் தொடர்ந்து சான் மீதான விசாரணை தொடங்கப்பட்டது.

காவல்துறை விசாரணையை ஆரம்பித்தபோது, சானின் சாதனங்களிலும், நர்சரியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஐபாட்களிலும், புலனாய்வாளர்கள் “மிகவும் ஆழ்ந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை” (deeply disturbing material) கண்டுபிடித்தனர்.

மேலும், நர்சரியில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான வீடியோ ஆதாரங்களையும் காவல்துறை கண்டறிந்தனர். இதில் சில காட்சிகள் நர்சரியின் ஐபாட்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் காவல்துறை விரைவாகச் செயல்பட்டு, பெற்றோரின் புகார்கள் அல்லது நர்சரியில் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் குற்றவாளியைக் கைது செய்தது.

குற்றவாளியை , வூட் கிரீன் கிரவுன் நீதிமன்றத்தில் (Wood Green Crown Court) ஆஜர் படுத்தப்பட்டபோது, குற்றவாளி தனக்கு எதிரான 26 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகளில், பாலியல் ஊடுருவல் (sexual assault by penetration), பாலியல் தொடுதல் (sexual assault by touching) மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தின் மிகக் கொடூரமான வகையைக் குறிக்கும் ஆபாசப் படங்களை உருவாக்கியது (making indecent images) போன்ற குற்றங்கள் அடங்கும்.

வூட் கிரீன் கிரவுன் நீதிமன்றத்தில் வின்சென்ட் சான் (Vincent Chan) குற்றத்தை ஒப்புக்கொண்டபோது, நீதிபதி டேவிட் ஆரன்பெர்க் KC (Judge David Aaronberg KC) குற்றவாளியைப் பார்த்து, “திரு. சான், நீங்கள் ஒப்புக்கொண்ட குற்றங்களுக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனை நிச்சயம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் இந்த நபர் ஒரு மழலையர் பள்ளியில் (Nursery) குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வின்சென்ட் சான் ஃபின்ச்லி (Finchley) பகுதியின் ஸ்டான்ஹோப் அவென்யூவைச் (Stanhope Avenue) சேர்ந்தவர்.

அந்த நர்சரியில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். அவர் கலை நிபுணர், அறைத் தலைவர் (room leader) மற்றும் நர்சரி செவிலியர் (nursery nurse) போன்ற பணிகளைச் செய்துள்ளார்.

அந்த நபரிடம் இரண்டு முதல் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வின்சென்ட் சான் போன்ற ஒருவர் எப்படி வேலைக்கு அமர்த்தப்பட்டார்?

பிரைட் ஹொரைசன்ஸ் மழலையர் பள்ளி (Bright Horizons nursery) குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் (safeguarding) இருந்த ஊழியர்கள் செயல்படாமல் இருந்தமையே கரணம், குழந்தைகள் மீதான இத்தகைய பயங்கரமான கொடூரம் இவ்வளவு காலம் எப்படித் தொடர முடிந்தது? இவை அனைத்துக்கும் அந்த பள்ளி நிர்வாகமே பதில் கூறவேண்டும்.

வின்சென்ட் சானுக்கான தண்டனை விவரங்கள் ஜனவரி 23 அன்று அறிவிக்கப்படும்.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!