ஜெர்மனியில் வீதிக்கு இறங்கிய பாரிய அளவிலான மக்கள்
ஜெர்மனியின் பேர்லிங் நகரில் அண்மையில் நடைபெற்ற ஆர்பாட்ட பேரணியில் எழுப்பப்பட்ட கோஷங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த கோஷங்கள் தொடர்பாக ஜெர்மனி உளவு துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
நேற்று முன்தினம் ஏப்ரல் 9 ஆம் திகதி பேரிலிங் இல் உ்ள்ள நோயகுள் என்ற பிரதேசத்தில் பாலஸ்தினர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுப்பட்டிருந்தனர்.
இதேவேளையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியவர்கள் இஸ்ரேலியர்களுக்கு எதிராக பாரிய கோஷங்களை முன்வைத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் தற்பொழுது ஜெர்மனியின் உள்ளநாட்டு உளவு அமைப்பானது இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
அதாவது யுதர்களுக்கு எதிரான கோஷங்கள் இந்த பேரணியின் பொழுது எழுப்பப்பட்டதாகவும் இதேவேளையில் இஸ்ரேயலர்கள் அழியப்பட வேண்டும் எனவும் இந்த பேரணியில் கூறப்பட்டுள்ளது.
இந்த பேரணியால் மக்களடையே பாரிய பாகுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகின்றது.
இதன் அடிப்படையிலே இவ்வாறு இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கு பற்றியவர்களுக்கு எதிராக விசாரணை முடக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.