ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
கொவிட் தடுப்பு ஊசி தயாரித்த பயோன்டெக் நிறுவனத்தின் மீது தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து பலர் வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள்.
கொரோனா தொற்றானது உலக நாடுகளை கடந்த இரு ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்திருந்தது.
விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் தங்களது முயற்சியால் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு ஊசிளை தயாரித்த நிலையில மக்கள் அதனை செலுத்தியும் வந்துள்ளனர்.
இதேவேளையில் சிலர் இவ்வாறு கொரோனா தடுப்பு ஊசி செலுத்திய பின் தங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜெர்மனியில் கொரோனா தடுப்பு ஊசி உற்பத்தியில் முன்னோடி நிறுவனமான பயோன்டெக் என்ற நிறுவனத்திற்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
அதாவது டுசில்டோவில் உள்ள சட்ட தரணிகள் அமைப்பொன்றும் இதே வேளையில் பிரெங்புட் இல் உள்ள சட்ட தரணிகள் அமைப்பு ஒன்றும் பல விண்ணப்பதாரிகளின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்குகளை நடாத்தி வருவதாக தெரிய வந்திருக்கின்றது.