காளான் கறி சாப்பிட்ட மூவருக்கு நேர்ந்த கதி!சமைத்து கொடுத்த பெண் கைது
காளான் கறி சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம், விக்டோரியா மாநில லியோங்காதா நகரில் மதிய உணவு உண்ட பின்னர் மூவர் உயிரிழந்தனர். அத்துடன் அந்த உணவு அருந்திய மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் அந்த மதிய உணவை தயாரித்த எரின் பேட்டர்சன் என்ற பெண் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
49 வயதான எரின் பேட்டர்சன், தாம் குற்றமற்றவர் என்று கூறியுள்ள நிலையில், அவரை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், அவரது வீட்டில் தேடுதல் நடத்துவதற்காக அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை மதிய உணவில் கலந்துகொண்ட அனைவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நால்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதி உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 70 வயதான தம்பதியரும் 66 வயதான பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் இறந்தனர்.
மேலும் ஒருவர் இரண்டு மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார். இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காளான் வகையைப் பயன்படுத்தி ‘பீஃப் வெலிங்டன் பை’ சமைத்ததாக எரின் பேட்டர்சன் கூறியிருந்தார்.”நான் நேசித்தவர்களை காயப்படுத்த எனக்கு எந்த காரணமும் இல்லை என்பதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன்” என்று எரின் பேட்டர்சன் கூறியதாக தெரிவிகப்படுகின்றது.