உங்கள் வேலையில் உயரத்தைத் தொடலாம் – கடைப்பிடிக்க சில வழிமுறைகள்
வேலையில் நிராகரிக்கப்படுவது கஷ்டமானதுதான், ஆனால் கற்றுக்கொள்ள அதில் நிறைய விஷயம் இருக்கிறது. இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட ஒரு சி.இ.ஓ அதற்கு பதிலளிக்கிறார்.
புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிகையான வோக்கின் எடிட்டர் அன்னா வின்டூர், ஹார்பர்ஸ் பஸார் பத்திரிகை வேலையிலிருந்து தன்னை நீக்கியதுதான் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் என்று கூறியிருக்கிறார். ஐ.டி.8 மீடியா சொல்யூஷன்ஸ் சி.இ.ஓ-வான தான்யா ஸ்வெட்டாவும் அன்னாவின் கொள்கையோடு உடன்படுகிறார். தற்போது பி.ஆர். நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் தான்யா, இதற்கு முன்னர் 2 முறை நிராகரிக்கப்பட்டிருக்கிறார். “எப்போதுமே ஒரு பி.ஆர். புரொஃபெஷ்னலாக வேண் டும் என்றே விரும்பினேன். ஆனால் லினோபீனியன் நிறுவனம் என்னை ‘பொருத்தமில்லாதவர்’ என்று நிராகரித்துவிட்டது. டாண்டெம் கம்யூனி கேஷன்ஸ் நிறுவனமும் பின்னர் நிராகரித்தது. ஆனால் ஒரு சிறந்த பி.ஆர். புரொஃபெஷ்னலாக இருக்க முடியும் என்று தீர்மானித்து ஆறு மாதங்கள் செலவிட்டேன்” என்கிறார் அவர். நிராகரிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான குறிப்புகளை தான்யா பகிர்ந்துகொள்கிறார்.
ஏன் என்று கேளுங்கள்:
நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு சோர்வடைந்து விடாதீர்கள். நீங்கள் ஏன் ஒரு நல¢ல விண்ணப் பதாரர் அல்ல என்பதைப் பற்றி நிர்வாகத்திடம் கேட்டு, அந்த பதில்களை சிறந்த விண்ணப்பதாரராக உங்களை உருவாக்கிக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இது பெர்சனல் விஷய மல்ல:
நிராகரிக்கப்படுவது என்பது பெர்சனல் விஷயம் அல்ல. சுய இரக்கத்தில் மூழ்கிப் போவதற்கு பதிலாக உங்கள் மீதே நம்பிக்கை வைக்கும் விதமாக ஒரு வேலையை தேடிக் கொள்வதில் உங்கள் ஆற்றலைப் பயன்படுத்துங் கள். வெற்றிக்கான போராட்டத்தில் எப்போதும் முன்னோக்கியவராக நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்,- நீங்கள் எதை நோக்கி சென்று கொண் டிருக்கிறீர்கள் என்பதை அது சுட்டிக்காட்டும்.
உதவி கேளுங்கள்:
உறவில் பிரச்சினை ஏற்படும்போது நண்பர்கள், குடும்பத்தினரின் உத வியை நாடிச் செல்வது போல இதிலும் செய்யுங் கள். நிராகரிப்பை சமாளிக்க உதவும் நிபுணர்கள், தொழில் சார்ந்த ஆலோசகர்களின் உதவியையும் நாடலாம்.
மேம்படுத்திக் கொள்ளுங்கள்:
உங்களிடம் இல்லாத திறமையை உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுய மதிப்பீடு செய்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள். முற்றிலும் தயாராகிவிட்டீர்களா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுடைய நேர்காணல் உத்திகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதை காண்பீர்கள்.
காலத்திடம் விட்டுவிடுங்கள்:
போதுமான அளவு காலத்தை செலவிடாமல் இருக்காதீர்கள். எதையும் 3 முறையாவது முயற்சி செய்யுங்கள். நல்ல வேலையைத் தேடுவதற்கு ஏறத்தாழ ஆறு மாதங்கள் ஒதுக்குங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கான இலக்குகளை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.