இத்தாலியில் Chat GPT ஐ பயன்படுத்த தடை!
புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான சட் ஜிபிடியைத் தடை செய்யும் முதல் மேற்கத்திய நாடாக இத்தாலி மாறியுள்ளது.
சட் ஜிபிடி (Chat GPT) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஓபன் ஏஐ என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. மற்றும் மைக்ரோசாப்ட் ஆதரிக்கும் மொடல் ஆகும்.
இந்நிலையில் சட் ஜிபிடியில் தனியுரிமை பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாக இத்தாலிய தரவு-பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஓபன்ஏஐயின் சட் ஜிபிடியை உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து விசாரணை நடத்தப்படுவதாக இத்தாலியின் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சட் ஜிபிடியை மில்லியன் கணக்கான மக்கள் இந்த செயலியை பயன்படுத்தியுள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)