இலங்கை செய்தி

அதிரடியாக குறைவடைந்த தங்க விலை

தங்கத்தின் விலை இன்றைய தினம் அதிரடியாக குறைவடைந்துள்ளது.

இதன்படி, இன்று (19) நண்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 13,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.

இதன்படி 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றைய தினம்  362,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை 9,000 ரூபாவினால் குறைந்திருந்ததுடன்,  நண்பகல் வேளையில் மேலும் 4,000 ரூபாவினால் தங்கம் விலை குறைந்துள்ளது.

நேற்று (18) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 374,400 ரூபாவாகக் காணப்பட்டதுடன், இன்று அது பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, நேற்று 407,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 394,000 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!