அக்னி ஆற்று மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டபட்டது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா அருகே அமைந்துள்ளது தூவார் மற்றும் ஆத்தங்கரை விடுதி கிராமம்
இந்த இரு கிராமத்திலும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
இந்த நிலையில் தாங்கள் விவசாய பூமி என்பதால் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு மிகவும் பாலம் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர் மேலும் மலைக்காலங்களில் தாங்கள் கிராமத்தில் இருந்து கந்தர்வகோட்டை செல்ல வேண்டுமென்றால் சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேலாக சுத்தி சென்று இருந்தனர் இது குறித்து இரு கிராம பொதுமக்களும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை இடம் கூறினார் உடனடியாக கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் பின்னரில் குறித்து அமைச்சர்கள் மற்றும் முதல்வரிடம் பேசினார் உடனடியாக இதற்கு பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் உறுதி அளித்திருந்தார் இதனை அடுத்து பொதுப்பணித்துறை நிதியிலிருந்து ரூபாய் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அக்னி ஆற்றை துவார் பகுதியில் இருந்து ஆத்தங்கரை விடுதி கிராமத்தை இணைக்கும் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயா மாவட்ட செயலாளர் கே கே செல்லபாண்டியன் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கூட்டணி கட்சித் தொண்டர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர் இந்நிகழ்விற்கு வருகை தந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் .