ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை – மகிழ்ச்சியில் ஜெலென்ஸ்கி

உக்ரைனுக்கு அமெரிக்கா மீண்டும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிற முக்கிய இராணுவ ஆயுதங்களை வழங்கத் தொடங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உள்வரும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைக் கண்டறிந்து இடைமறிக்கும் திறனுடைய உலகின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் பேட்ரியாட் பேட்டரி, உக்ரைனின் பாதுகாப்புக்கு மிக முக்கியமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை, முன்பு நிறுத்தியிருந்த சில ஆயுதங்களை உக்ரைனுக்குப் மீண்டும் வழங்கும் முடிவை எடுத்துள்ளதாகவும், இதுகுறித்து வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், நேட்டோ மூலம் உக்ரைனுக்கு பேட்ரியாட் அமைப்புகளை அனுப்பும் திட்டம் குறித்து அமெரிக்கா ஒரு புதிய உடன்பாட்டை எட்டியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் வான் தாக்குதல்கள் தீவிரமாகியுள்ள நிலையில், உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முடிவு அவசியமானது என தெரிவித்தார்.
தற்போது ரஷ்யா, உக்ரைன் நகரங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் தொடர்ந்து தாக்கி வருகிறது.
இந்த தாக்குதல்களால் பல்வேறு பகுதிகளில் பெரும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் பாதுகாப்புக்காக வான் பாதுகாப்பு அமைப்புகள் மிக அவசியமாகிவிட்டுள்ளன என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.