விஜய் முகத்தில் குத்த வேண்டும் என்று கூறிய ரஞ்சித்.. TVK அதிரடி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு சமீபத்தில் மதுரையில் நடந்தது. மேடையில் ஆவேசமாக பேசிய விஜய் பாஜக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளையும் தாக்கி பேசினார்.
பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை கடுமையாக அவர் தாக்கி பேசியதற்கு அந்த கட்சி தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
அப்படி பிரபல நடிகர் ரஞ்சித் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார்.
ஏற்கனவே சாதி ஆணவ கொலைகளுக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் புகழ் ரஞ்சித் தான் தற்போது மேடையில் விஜய்யை தாக்கி பேசியுள்ளார்.
மோடியை மிஸ்டர் மிஸ்டர் என சொல்லி பேசுகிறார் விஜய். எனக்கு அப்பா யாரென்றால் மோடி தான். எனக்கு வரும் கோபத்துக்கு விஜய்யை ஓங்கி குத்த வேண்டும் போல இருக்கிறது என ரஞ்சித் பேசி இருக்கிறார்.
இது பற்றி தற்போது தவெகவினர் போலீசில் புகார் அளித்து இருக்கின்றனர்.