Skip to content
அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் யூடியூப்!

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிரமுக்கு போட்டியாக 60 விநாடிகள் வரையிலான வீடியோக்களில் முதன்மையாக கவனம் செலுத்தி வந்த யூடியூப் தற்போது 60 நிமிட வீடியோக்களை 3 நிமிடங்கள் வரை வழங்க முடிவு செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் யூடியூப் ஷார்ட்ஸில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அக்டோபர் 15 முதல் யூடியூப் ஷார்ட்ஸில் மூன்று நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம் என்பதே அந்த மாற்றமாகும்.

இந்த மாற்றம் ஸ்கொயர் மற்றும் வெர்டிகல் அமைப்பை கொண்ட வீடியோக்களை மட்டுமே பாதிக்கும். மேலும் செயல்படுத்தும் தேதிக்கு முன் பதிவேற்றப்பட்ட எந்த வீடியோக்களுக்கும் இதனால் எந்த பாதிப்பும் இருக்காது. மேலும், வரும் மாதத்தில் நீண்ட ஷார்ட்ஸ்களுக்கான பரிந்துரைகளை மேம்படுத்துவதில் யூடியூப் தீவிரமாக உள்ளது.

கூடுதலாக, யூடியூப் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த ஷார்ட்ஸை, டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தி மீண்டும் மறுஉருவாக்கம் செய்ய அனுமதிக்கிறது. இந்த டெம்ப்ளேட்கள் புதிய இசை மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வருகின்றன, இதனை யூசர்கள் சமீபத்திய டிரெண்ட்களுடன் பரிசோதனை செய்து கொள்ள முடியும். இந்த டெம்ப்ளேட்களைப் பயன்படுத்த, யூசர்கள் தங்களுக்கு விருப்பமான ஷார்ட்ஸில் “ரீமிக்ஸ்” என்கிற ஆப்ஷனை தேர்வு செய்து இந்த டெம்ப்ளேட்டைப் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்து இந்த தனித்துவமான அம்சத்தை பயன்படுத்த முடியும்.

வரும் மாதங்களில், ஷார்ட்ஸ் கேமரா மூலம் அணுகக்கூடிய ஓர் சிறப்பம்சத்தை யூடியூப் விரிவுபடுத்த இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த வீடியோக்களில் இருந்து மியூசிக் வீடியோக்கள், கிளிப்புகள் மற்றும் தடையின்றி ரீமிக்ஸ் செய்ய வழி செய்கிறது. இந்த புதிய அம்சம் யூசர்கள் பல்வேறு யூடியூப் வீடியோக்களில் இருந்து தங்களுக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுக்கவும், அவர்களின் விருப்பங்களை மேம்படுத்தவும், யூசர்கள் யூடியூபில் வலம் வரும் திறனை மேம்படுத்தவும் உதவும் என்று நம்புகிறது.

மேலும், கூகுள் டீப் மைண்ட் மூலம் வீடியோ உருவாக்கும் மாடலான வியோ, யூடியூப் ஷார்ட்ஷில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. இமேஜினரி செட்டிங்ஸ் மற்றும் தனித்துவமான வீடியோ கிளிப்புகள் மூலம் வீடியோ தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமான வீடியோக்களை உருவாக்க இது உதவுகிறது.

“குறைவான ஷார்ட்ஸ்களைக் காட்டு” என்ற புதிய விருப்பத்தை தேர்வு செய்வதன் மூலம், யூடியூப் பயனர்களின் ஹோம்பேஜில் குறிப்பிடத்தக்க ஷார்ட்ஸ்கள் மட்டுமே இடம்பெறும் ஆப்ஷனையும் யூடியூப் வழங்குகிறது.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்