செய்தி தமிழ்நாடு

மண்சரிவில் சிக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம்:- திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணியின் போது மண் சரிவில் சிக்கி வட மாநில இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.இதேபோல் இன்று மாலை திண்டிவனம் ரொட்டி கார தெருவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்றது.

அங்கு மேற்கு வங்காளம், ஜல்பைகுரி அடுத்த சைலிஹத் ரானிசேரா டீ கார்டன் பகுதியை சேர்ந்த சுக்மன் மிஞ் மகன் சிராஜ் மிஞ்(22) மற்றும் அவருடன் மூன்று வட மாநிலத்தவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

மூன்று பேர் மேலே இருந்து ஜல்லி கலந்து கொடுக்க, சிராஜ் மீஞ் பள்ளத்தில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு சிராஜ் மீஞ், மண் சரிவில் சிக்கிக் கொண்டார்.

அருகில் இருந்தவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் ஒரு மணி நேரம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இளைஞரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இளைஞர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 8 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி