குருநாகலையில் போலி நாணயத்தாள்களுடன் இளைஞர் கைது

பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிபோட்டாவில் 45 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் பொத்துஹெர காவற்துறையினர் அவரை சோதனையிட்டதன் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான சந்தேக நபர், போலி நாணயத்தாள்களை அச்சடித்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)