சிங்கப்பூரில் கடன் பெற்று சொந்த வீடு வாங்கும் இளைஞர்கள் – அதிகரிக்கும் எண்ணிக்கை
சிங்கப்பூரில் கடன் பெற்று இளைஞர்கள் வீடு வாங்கும் போக்கு அதிகரித்துள்ளதாக வங்கிகளின் தகவல்கள் ஊடாக தெரியவந்துள்ளது.
அதிகமான இளைஞர்கள் வீடு வாங்குதற்காகக் கடன் பெறுவதாக வங்கிகள் கூறுகின்றன. வீடு வாங்கக் கடன்பெறுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இளைஞர்களாகும்.
பொதுவாக இளையர்கள் கடனைத் திரும்பச் செலுத்தாமல் பாதியில் விடுவதில்லை என்றாலும் இளையர்களுக்கு அதிகக் கடன்கொடுப்பதில் வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன.
தனியார் வீடுகளை வாங்கும் இளம்தம்பதியின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2015ஆம் ஆண்டுமுதல் தனியார் வீட்டை வாங்கும் இளம்தம்பதியின் எண்ணிக்கை 3 மடங்காயிருப்பதாக ஒரு சொத்து முகவர் நிறுவனம் கூறுகிறது. அவர்கள் 26 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகும்.
இன்று சிங்கப்பூரில் தனியார் வீடுகளை வாங்குவதில் 35 சதவீமானோர் அந்த வயதைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.