பிரித்தானியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர் – பொலிஸார் தீவிர விசாரணை!

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸில் உள்ள பகுதியில் நேற்று (24.05) இரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் 16 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு வேல்ஸில் உள்ள பாரி தீவு இன்ப பூங்காவிற்கு ஒரு விமான ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது, அவசர சிகிச்சை பிரிவு முயற்சி செய்த நிலையிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பூங்காவில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)