ஜார்ஜியா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இளம் பிரிட்டிஷ் கர்ப்பிணி பெண்
																																		தாய்லாந்தில்(Thailand) இருந்து கஞ்சா மற்றும் ஹாஷிஷ்(hashish) கடத்தியதற்காக ஜார்ஜியாவில்(Georgia) சிறையில் அடைக்கப்பட்ட கர்ப்பிணி பிரிட்டிஷ் இளம்பெண் பெல்லா கல்லி(Bella Gully) ஆறு மாதங்களுக்கு பிறகு ஒரு மனு ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு தான் விடுதலை செய்யப்பட்டது எதிர்பார்க்கவில்லை என்றும், இந்தச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பதாகவும் 19 வயதான பெல்லா கல்லி குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள பில்லிங்ஹாமைச்(Billingham) சேர்ந்த பெல்லா கல்லி, மே மாதம் தாய்லாந்தில் காணாமல் போன பிறகு ஜார்ஜியாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் பெல்லா கல்லியின் வயது மற்றும் கர்ப்பத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜார்ஜியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்கம் சில போதைப்பொருட்களை உட்கொள்வதற்கும் சிறிய அளவில் வைத்திருப்பதற்கும் தண்டனைகளை அதிகரிக்கும் திருத்தங்களை நிறைவேற்றியது.
தொடர்புடைய செய்தி
தாய்லாந்தில் காணாமல் போன பிரிட்டிஷ் பெண் ஜார்ஜியாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
        



                        
                            
