இங்கிலாந்தில் நிரந்தர குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்க 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
இங்கிலாந்தில் புகலிட மாற்றங்களில் முக்கிய திருத்தங்களை உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) நாளைய தினம் அறிவிக்கவுள்ளார்.
புதிய திட்டத்தின்படி, இங்கிலாந்தில் புகலிடம் பெற்றவர்கள் நிரந்தரமாக குடியேற விண்ணப்பிக்க 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
சண்டே டைம்ஸிடம் அவர் அளித்துள்ள பேட்டியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், சட்டவிரோத குடியேறியாக இந்த நாட்டிற்கு வராதீர்கள், படகில் ஏறாதீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத இடம்பெயர்வு நம் நாட்டை துண்டாடுகிறது எனக் கூறிய அவர் அதனை ஒருங்கிணைப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் கூறினார்.
“நாம் இதை சரிசெய்யவில்லை என்றால், நம் நாடு மிகவும் பிளவுபட்டதாகிவிடும் என்று நான் நினைக்கிறேன்,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.





