“நீங்கள் எனக்கு நல்ல தந்தை, நல்ல நண்பர்” – கனடாவில் கொல்லப்பட்டவருக்கு இலங்கையில் இருந்து மகள் அஞ்சலி
கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் உட்பட 06 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இலங்கை நேரப்படி நேற்று இரவு இடம்பெற்றது.
அவர்களின் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
அத்துடன், படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இக்குடும்பத்தின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்க முதன்முறையாக ஊடகங்களுக்கு முன்னிலையானார்.
கனடா, ஒட்டாவா, Barrhaven பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த இலங்கை குடும்பம் ஒன்றின் தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் உட்பட 06 இலங்கையர்கள் நேற்று 6 ஆம் திகதி இரவு கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த Fabrio De Soyza என்ற மாணவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்க காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
35 வயதுடைய திலந்திகா தர்ஷனி ஏகநாயக்க என்ற குடும்பத்தின் தாயார் மற்றும் அவரது பிள்ளைகளான ஏழு வயது இனுகா விக்ரமசிங்க, 4 வயது அஷ்வினி விக்கிரமசிங்க, இரண்டு வயது ரினயா விக்கிரமசிங்க மற்றும் இரண்டு மாத குழந்தை கேலி விக்கிரமசிங்க. கொல்லப்பட்டனர்.
மேலும், அந்த குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த 40 வயதான காமினி அமரகோன் என்பவரும் இங்கு கொல்லப்பட்டார்.
கொலை இடம்பெற்று 10 நாட்களின் பின்னர் சடலங்கள் இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் இறுதிக் கிரியைகள் இலங்கை நேரப்படி நேற்று இரவு 10.30 மணியளவில் ஒட்டாவாவிலுள்ள இன்பினிட்டி மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது.
கொலைச் சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தின் தந்தை தனுஷ்க விக்ரமசிங்க முதன்முறையாக ஊடகங்கள் முன் தோன்றினார்.
தனுஷ்க விக்ரமசிங்கவின் தந்தையும் சகோதரரும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதுடன், தனுஷ்க விக்ரமசிங்க தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் உடலங்களுக்கு முன்னால் உணர்ச்சிவசப்பட்டார்.
இதன்போது, உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள், ஒட்டாவா மேயர், பொலிஸ் மா அதிபர் மற்றும் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன இதன்போது பேசுகையில்,
“இந்த சோகமான சந்தர்ப்பத்தில் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உயிரைக் காப்பாற்றிக் கொண்டு முன்னேறும் சிலர் வாழ்க்கையில் தவறு செய்வார்கள். இப்படிப்பட்ட துயரமான சூழ்நிலையில் அனைவரும் ஒன்று சேர்வதில் மனப்பூர்வமாக மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 40 வயதுடைய காமினி அமரகோனின் மனைவியும் மகளும் ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் தமது துயரத்தை வெளிப்படுத்தினர்.
உயிரிழந்த காமினி அமரகோனின் மனைவி,
“நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை நான் இன்னும் உணர்கிறேன். நாம் சேகரித்த நினைவுகள் அனைத்தும் நம் இதயத்தில் நிலைத்திருக்கும்.
உயிரிழந்த காமினி அமரகோனின் மூத்த மகள் இறுதிச்சடங்கு சபையில் தனது அனுதாபச் செய்தியை முன்வைத்த போது, வந்திருந்த பலரும் உணர்ச்சிவசப்பட்டனர்.
“நீங்கள் எனக்கு நல்ல தந்தை. மற்றும் ஒரு நல்ல நண்பர். அம்மாவுக்கு நல்ல கணவர். அப்பா, நாங்கள் அனைவரும் உங்களை இழக்கிறோம். எங்கிருந்தாலும் ஜாக்கிரதையாக இருங்கள் அப்பா.’’ என்றார்.
இதேவேளை, உயிரிழந்த குடும்பத்தின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்கவின் அனுதாபச் செய்தியை அவர் சார்பாக கனடா பௌத்த பேரவையின் தலைவர் நாரத கொடித்துவக்கு வழங்கி வைத்தார்.
“எனது அன்பு மனைவி தர்ஷனி, எனது சின்னஞ்சிறு குழந்தைகள் இனுகா, ரியானா, அஷ்வினி மற்றும் கெய்லி ஆகியோரின் இழப்பால் நான் மிகவும் வருந்துகிறேன்.
மேலும், எனது நண்பர் காமினியின் மரணம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், இந்த சம்பவம் நடந்த நாள் முதல் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.
பின்னர் உடல்கள் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.