இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி Houthis!
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், ஏமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் Houthis இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தெற்கு இஸ்ரேலிய இராணுவ நிலைகளை இலக்கு வைத்து பாலիս்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லெபனான் மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பதிலாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஈரான் ஆதரவு பெற்ற இந்த குழு, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ளது.





