உலகம் செய்தி

சவூதி அழுத்தமா? ஏமன் தெற்கு பிரிவினைவாத அமைப்பு திடீர் கலைப்பு

சவூதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஏமனின் முக்கிய தெற்கு பிரிவினைவாத அமைப்பான தெற்கு இடைக்கால கவுன்சில் (STC) தங்களை கலைக்க முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

STC பொதுச் செயலாளர் அப்துல்ரஹ்மான் அல்-சுபைஹி, வெள்ளிக்கிழமை யேமன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில், தெற்கு ஏமன் மற்றும் அண்டை நாடுகளில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

“சவூதி அரேபியா எடுத்த நடவடிக்கைகள் தெற்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தீர்வுகளை வழங்கியுள்ளது” என அல்-சுபைஹி கூறினார்.
இதற்காக அவர் சவூதி அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

இருப்பினும், ரியாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காத STC உறுப்பினர்களிடமிருந்து இதுகுறித்து உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லையென சர்வதேச செய்திகள்
தெரிவிக்கின்றன.

மேலும், ரியாத்தில் உள்ள தங்களது தூதுக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுடனும் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக STC தெரிவித்துள்ளது.
இது அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆதரவுடன் செயல்படுவதாக சவூதி அரேபியா கூறும் STC, கடந்த டிசம்பரில் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது.

இதன் மூலம் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான மறைமுக முரண்பாடு வெளிச்சத்துக்கு வந்தது.

இதனிடையே, ஏமனில் செயல்படும் சவூதி தலைமையிலான கூட்டணி, STC தலைவர் ஐடரஸ் அல்-ஜுபைடி ரியாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளை புறக்கணித்து, சோமாலிலாந்து வழியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பிச் சென்றதாக குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அவரை நாட்டிலிருந்து கடத்திச் சென்றதாகவும் அந்த கூட்டணி குற்றம் சுமத்தியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!