இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

இங்கிலாந்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையானது ஏழு மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் புயல்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பகுதிகளிலும், வேல்ஸ் மற்றும் மிட்லாண்ட்ஸின் சில பகுதிகளிலும் வாழும் பிரிட்டீஷ் மக்கள் இந்த வார இறுதியில் மோசமான வானிலையால் பாதிக்கப்படுவார்கள் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)