WTC Final – முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா பந்துவீச்சில் தடுமாறும் தென்ஆப்பிரிக்கா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 56.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 212 ரன்னில் சுருண்டது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்மித் 66 ஓட்டங்களும் வெப்ஸ்டர் 55 ஓட்டங்களும் பெற்றனர்.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். யான்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
அதை தொடர்ந்து முதலாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் நாள் முடிவில் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
தென்ஆப்பிரிக்கா சார்பில் ரிக்கெல்ட்டன் 16 ஓட்டங்களும் அணியின் தலைவர் பவுமா 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஸ்டார்க் 2 விக்கெட்களும் ஹசல்வுட் மற்றும் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டும் பெற்றுள்ளனர்.