UKவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட மோசடிக் குற்றவாளி மீண்டும் சரணடைந்தார்!
பிரித்தானியாவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட மோசடி குற்றவாளியான வில்லியம் ஸ்மித் (William Smith) தானாக முன்வந்து காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
அவர் தற்போது காவலில் இருப்பதாக சர்ரே காவல்துறை (Surrey Police) தெரிவித்துள்ளது.
இதனை உறுதிப்படுத்திய லாமி (Lammy) தவறான விடுதலைகளில் உள்ள “ஸ்பைக்” (spike) ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் சிறை அமைப்புகளை நவீனமயமாக்குகிறோம். பிழைகளைக் குறைக்க டிஜிட்டல் கருவிகளால் மாற்றுகிறோம்,” என்று அவர் கூறுகிறார்.
மேலும் முன்னதாக விடுதலை செய்யப்பட்ட பிரஹிம் கடூர்-செரிப்பை (Brahim Kaddour-Cherif) கைது செய்ய காவல்துறை முழு வீச்சுடன் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.
(Visited 5 times, 2 visits today)





